சனி, 1 டிசம்பர், 2012

சோழபுரம் கிளையில் ப்ளெக்ஸ் போர்டு மூலம் தஃவா.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 26.11.12 திங்கட்கிழமை அன்று கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு உணர்வு வார இதழில் வெளியான் உணர்வலையில் தலித்துகளுக்கு தஃவா செய்யும் விதமான செய்தி வெளியானது இதை 10x8 சைசில் ஊரின் பிரதான சாலையில் வைக்கப்பட்டது.

சோழபுரம் கிளையில் யார் இந்த மாமனிதர் நோட்டிஸ் விநியோகம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27.11.12 செவ்வாய்க்கிழமை அன்று 1000 நோட்டிஸ் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

திங்கள், 29 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.



சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில்







14/10/12 அன்று சோழபுரம் கிளையில்
ரஹ்மானிய தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு:ஏகதுவகொள்கை
உரை: வல்லம் இஸ்மாயில்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா .


சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா.

07/10/12 அன்று சோழபுரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.
ஜனாஸாவின் சட்டங்கள் (குளிப்பு,தொழுகை)
ஜனாஸா சம்பந்தம்பட்ட கேள்வி,பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னூர் மதரசா ஆலிம்கள் பயிற்சி அளித்தனர்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.



சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம். 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் UAE கிளையில்  ஆலோசனை கூட்டம் Dubai JT  தவ்ஹீத் மர்க்கஸில் 14/09/2012 அன்று நடைப்பெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20.08.12 திங்கட்கிழமை அன்று நபிவழி நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.

சோழபுரம் கிளையில் ரூ.99,534 க்கு பித்ரா விநியோகம்.


சோழபுரம் கிளையில் ரூ.99,534 க்கு பித்ரா விநியோகம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 19.08.12 ஞாயிற்றுக்கிழமை அன்று 257 குடும்பங்களுக்கு ரூ.99,534 க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021

இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)

அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

ரமளான் மாத சிறப்பு கட்டுகரைகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

திங்கள், 16 ஜூலை, 2012

சோழபுரம் மேலத் தெரு நடைப்பெற்ற பெண்கள் பயான்.



14/07/12 அன்று சோழபுரம் மேலத் தெரு பெண்கள் பயான் நடைப்பெற்றது.
 தலைப்பு: பெரும் பாவங்கள்.
 உரை: நிவாஸ் பானு. 
 தலைப்பு: நோன்பு.  
 உரை: ஷர்மிலா பானு.
 





15/07/12 அன்று சோழபுரம் கீழவீதி பெண்கள் பயான் நடைப்பெற்றது.
 தலைப்பு: நோன்பு.
 உரை: நஸ்ரின் பானு.
 தலைப்பு: குர் ஆன் ஒளியே குடும்ப வழி.
 உரை: ஷர்மிலா பானு.

செவ்வாய், 10 ஜூலை, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

 சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சோழபுரம் கிளையில் 08.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று மெயின் ரோட்டில்பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமாகள் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலைப்பு: இஸ்லாமிய திருமணம்  
 உரை: அஸிரா 
 தலைப்பு: நல்ல அமல்களும் ,தீய அமல்களும் 
 உரை: நிஸ்வான  பானு
  தலைப்பு: நோன்பின் சட்டங்கள்
  உரை: அகிமா

வியாழன், 5 ஜூலை, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பொதுக்குழு.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பொதுக்குழு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 
 
தலைவர்                      : முஹமது நியாஸ்
செயலாளர்                 : ஜுனைதீன் 
பொருளாளர்              : முஹம்மது காசிம்
துணை தலைவர்       : ஜுபைர் 
துணை செயலாளர்  :  ஜாகிர் ஹுசைன்.
 
ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 01.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 22 ஜூன், 2012

மம கட்சியின் சமுதாயத் துரோகம் - பொதுக் கூட்டம்


24-6-2012 ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் www.onlinepj.com நேரடியாக ஒளிபரப்பாகும். "பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும்" பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்!

புதன், 20 ஜூன், 2012

பரபரப்புடன் திருச்சியில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!



திருச்சி,ஜுன்20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று 19.06.2012 அன்று திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!



முதலாவதாக மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை குறிப்பிட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விரிவான தகல்கள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷாஅல்லாஹ்!

ஞாயிறு, 17 ஜூன், 2012

நபிகளாரின் நற்குணங்கள்


கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்:

நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...


சனி, 16 ஜூன், 2012

இளைய தலைமுறைக்காக!


உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:


அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!


பத்தாம் வகுப்பு முடித்த பிறகு? மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்!




1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்...

புதன், 13 ஜூன், 2012

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

சோழபுரம்: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 16.06.2012 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் “மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெறுகின்றது. இதில் TNTJ மாநில மேலான்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்...

செவ்வாய், 12 ஜூன், 2012

TNPSC அலுவலகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! முற்றுகைப் போராட்டம் அறிவித்தது TNTJ!


ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 6 மே, 2012

கோடைகால பயிற்சி முகாம்!

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.05.2012 சனிக்கிழமை முதல் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு தனித்தனியே கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

வியாழன், 5 ஏப்ரல், 2012

மாணவிகளுக்கு தொழுகை பயிற்சி!

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 04.04.2012 புதன்கிழமை அன்று மாணவ, மாணவிகளுக்கு சகோதரரிகள் ஆலிமா அகிலா, அஸிரா மற்றும் நஸ்ரின் ஆகியோர்களால் தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 விழிப்புனர்வு பிரச்சாரம்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்ப்ற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல்லாஹ் DAIS அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சர்மிளா பானு ஆலிமா அவர்கள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

சனி, 11 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 29.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் பர்வின் பானு ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சோழபுரம் கிளையில் பிப்ரவரி 14 குறித்து சுவர் விளம்பரம்!


சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 20.01.12 வெள்ளிக்கிழமை அன்று பிப்ரவரி 14 குறித்து கிளை முழுவதும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

வெள்ளி, 27 ஜனவரி, 2012

சோழபுரம் கிளையில் ரூ.5000 மருத்துவ உதவி.

சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20.01.12 வெள்ளிக்கிழமை அன்று கமால் பாட்சா என்கின்ற சகோதரருக்கு ரூ.5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

வியாழன், 26 ஜனவரி, 2012

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


சோழபுரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.01.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அதுல்லாஹ் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்...

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 22.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் நான்கு ஆலிமாக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.




சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் மகதப் மதரசா.

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் மகதப் மதரசா.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 01.01.12 ஞாயிற்றுக்கிழமை முதல் மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதில் கிளை மர்க்கஸ் இமாம் அப்துல்லாஹ் DAIS அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மதரசாவில் இருபதுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.







சோழபுரம் கிளை சார்பாக ரூ.3000 தானே புயல் நிவாரண நிதி.

சோழபுரம் கிளை சார்பாக ரூ.3000 தானே புயல் நிவாரண நிதி.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தானே புயல் நிவாரண நிதியாக ரூ.3000 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.