செவ்வாய், 7 டிசம்பர், 2010

maruththuva udhavi

5 .12 .2010 .
விபத்தில் காயமடைந்த பெரோஸ் என்ற சிறுவனுக்கு U A E  இல் வசூல் செய்யப்பட்ட ரூ.3000 சோழபுரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது .

வியாழன், 18 நவம்பர், 2010

perunaal tholugai

18.11.10 அன்று சோழபுரம் கிளையில் 8 மணிக்கு  ஹஜ்ஜி பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் .

sholapuram tntj pothukulu

14.11.10 அன்று சோழபுரம் கிளை பொதுக்குழு தஞ்சை  வடக்கு மாவட்ட தலைவர்  இம்தியாஸ் ,மாவட்ட செயலாளர் ராஜிக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது

வியாழன், 11 நவம்பர், 2010

சாதிக் பாட்சா என்ற சகோதருக்கு  மருத்துவ உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது.
தேதி :-௦06.11.2010

MARUTHUVA UTHAVI

விபத்தில்  படுகாயம் அடைந்த பெரோஸ்  என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூ 2300 கிளை சார்பாக வழங்கப்பட்டது.
தேதி :- 8.11.2010

திங்கள், 11 அக்டோபர், 2010

nikkah

சோழபுரம் ராம்னுஜபுரத்தை  சேர்ந்த எ.நசிர் அஹ்மத் என்ற மணமகனுக்கும் அபுரோஜாகனி என்ற மணமகளுக்கும் 3 -10 -2010 அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

சோழபுரம் கிளையில் ரூ.2500 மருத்துவ உதவி

சோழபுரம் கிளையில் ரூ.2500 மருத்துவ உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில்பெரோஸ் கான் என்ற சகோதரர் விபத்தில் காயமடைந்தார் இவருக்கு 22.09.10புதன்கிழமை அன்று ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டதுஇதைஇவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்.


sholapuram TNTJ

Sholapuram TNTJ Board Members Contact Detail:

Abdul Malik          0091 99948 15430
Ahamed Kabeer 0091 99947 66962

திங்கள், 20 செப்டம்பர், 2010

சோழபுரம் கிளையில் ரூ.500/= வாழ்வாதார உதவி.

சோழபுரம் கிளையில் ரூ.500/= வாழ்வாதார உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 06.09.10 திங்கட்கிழமை அன்று அப்துல்லாஹ் என்கின்ற சகோதரருக்கு ரூ.500/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

சோழபுரம் கிளையில் ரூ.81,145/= பித்ரா விநியோகம்.

சோழபுரம் கிளையில் ரூ.81,145/= பித்ரா விநியோகம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 09.09.10 வியாழக்கிழமை அன்று ஒரு நபருக்கு ரூ.406/= வீதம் 200 நபருக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. வசூல் ஆன தொகை 81,145.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபி வழி பெருநாள் தொழுகை.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நபி வழி பெருநாள் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் நபி வழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி.

சோழபுரம் கிளையில் ரூ.10,000/= மருத்துவ உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஆசாத் என்கின்ற சகோதரருக்கு 10.08.10 செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ உதவயாக ரூ.10,000/= வழங்கப்பட்டது.

புதன், 16 ஜூன், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.


சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாம்கினார்.

சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.


சோழபுரம் கிளையில் ஏழை சகோதரருக்கு தொழில் தொடங்க உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 11.06.10 வெள்ளிகிழமை அன்று அப்துல்லாஹ் என்ற ஊனமுற்ற சகோதருக்கு வியாபாரம் செய்வதற்கு ரூ.௨000/- வழங்கப்பட்டது.

வெள்ளி, 11 ஜூன், 2010

சோழபுரம் கிளையில் அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ஜக்காத் நிதியிலிருந்து ரூ.௨000/- வழங்கப்பட்டத்து. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் காயமடைந்தார்.

செவ்வாய், 11 மே, 2010

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.05.10 திங்கட்கிழமை அன்று தோப்புத்தெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழவீதி, ஆகிய நான்கு இடங்களில் ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சனி, 8 மே, 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 ஆலோசனை கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 07.05.10 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜூலை 4 ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சுவர் விளம்பரம், ப்ளெக்ஸ் விளம்பரம், தெருமுனை பிரச்சாரங்கள், பெண்கள் பயான், மேலும் மக்களை எவ்வாறு அழைத்து செல்வது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களும் கலந்து கொண்டனர்.






திங்கள், 3 மே, 2010

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.

சோழபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் மர்க்கஸில் 01.05.10 சனிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இதில் சகோ: உபைதுல்லாஹ் மன்பஈ (சோழபுரம் மர்க்கஸ் இமாம்) அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.




ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் UAE கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் Dubai JT  தவ்ஹீத் மர்க்கஸில் 16/04/2010 அன்று நடைப்பெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் சோழபுரம் தவ்ஹீத் மர்க்கஸில் 07.04.10 புதன்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட பேச்சாளர் அன்சாரி, கிளைத் தலைவர் அகமது கபீர், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 3 ஏப்ரல், 2010

ஈமான்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

சனி, 27 மார்ச், 2010

நபிமொழி

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதர், நபி(ஸல்) அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!''என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)
 
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மல்யுத்தம் செய்பவர், உண்மையான வீரர் அல்ல. வீரர் என்பவர், கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரேயாவார்'' என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

புதன், 24 மார்ச், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் மௌலூதும், மீலாதும் என்ற தலைப்பிலும் சோழபுரம் தவ்ஹீத் பள்ளி இமாம் S. உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இறுதிப் பேருரை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட து.செயலாளர் M.அக்பர் அலி, கிளை தலைவர் A.கபீர் அகமது, கிளை செயலாளர் A.M.ஜுபைர், கிளை பொருளாளர் A.அப்துல் மாலிக், சோழபுரம் UAE கிளை தலைவர் A.முஹம்மது பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பேச்சாளர் H.அன்சார் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.




வெள்ளி, 12 மார்ச், 2010

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ.3000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ. 3000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது. சோழபுரம் கிளை மாணவரணி செயலாளர் தாஹிர் அரபாத் அவர்களுடைய சிறிய தாயாருடைய அறுவை சிகிச்சைக்காக இந்த உதவி வழங்கப்பட்டது. இதை மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களால் வழங்கப்பட்டது.

செவ்வாய், 9 மார்ச், 2010

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

இஸ்லாம்
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
‘மவ்லித்’ என்பதின் பொருள்
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.
”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)
செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)
மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)
மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.
ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற TNTJ பொதுக்குழு.

06.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சோழபுரம் கிளையில் மாலை 4 மணியளவில் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிறை, குறைகளை கேட்டறிந்து வரும் காலங்களில் ஆற்றக் கூடிய செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.