வெள்ளி, 22 ஜூன், 2012

மம கட்சியின் சமுதாயத் துரோகம் - பொதுக் கூட்டம்


24-6-2012 ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் www.onlinepj.com நேரடியாக ஒளிபரப்பாகும். "பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும்" பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்!

புதன், 20 ஜூன், 2012

பரபரப்புடன் திருச்சியில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!



திருச்சி,ஜுன்20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று 19.06.2012 அன்று திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!



முதலாவதாக மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை குறிப்பிட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விரிவான தகல்கள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷாஅல்லாஹ்!

ஞாயிறு, 17 ஜூன், 2012

நபிகளாரின் நற்குணங்கள்


கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்:

நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...


சனி, 16 ஜூன், 2012

இளைய தலைமுறைக்காக!


உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:


அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!


பத்தாம் வகுப்பு முடித்த பிறகு? மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்!




1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்...

புதன், 13 ஜூன், 2012

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

சோழபுரம்: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 16.06.2012 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் “மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெறுகின்றது. இதில் TNTJ மாநில மேலான்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்...

செவ்வாய், 12 ஜூன், 2012

TNPSC அலுவலகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! முற்றுகைப் போராட்டம் அறிவித்தது TNTJ!


ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.