ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் UAE கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் Dubai JT  தவ்ஹீத் மர்க்கஸில் 16/04/2010 அன்று நடைப்பெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஜூலை 4 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் சோழபுரம் தவ்ஹீத் மர்க்கஸில் 07.04.10 புதன்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மாவட்ட பேச்சாளர் அன்சாரி, கிளைத் தலைவர் அகமது கபீர், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 3 ஏப்ரல், 2010

ஈமான்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

சனி, 27 மார்ச், 2010

நபிமொழி

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதர், நபி(ஸல்) அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!''என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)
 
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மல்யுத்தம் செய்பவர், உண்மையான வீரர் அல்ல. வீரர் என்பவர், கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரேயாவார்'' என்று பலமுறை நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

புதன், 24 மார்ச், 2010

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் மௌலூதும், மீலாதும் என்ற தலைப்பிலும் சோழபுரம் தவ்ஹீத் பள்ளி இமாம் S. உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இறுதிப் பேருரை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட து.செயலாளர் M.அக்பர் அலி, கிளை தலைவர் A.கபீர் அகமது, கிளை செயலாளர் A.M.ஜுபைர், கிளை பொருளாளர் A.அப்துல் மாலிக், சோழபுரம் UAE கிளை தலைவர் A.முஹம்மது பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பேச்சாளர் H.அன்சார் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.




வெள்ளி, 12 மார்ச், 2010

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ.3000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ரூ. 3000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது. சோழபுரம் கிளை மாணவரணி செயலாளர் தாஹிர் அரபாத் அவர்களுடைய சிறிய தாயாருடைய அறுவை சிகிச்சைக்காக இந்த உதவி வழங்கப்பட்டது. இதை மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்களால் வழங்கப்பட்டது.