வெள்ளி, 18 ஜனவரி, 2013

அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!

அபுதாபி: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக சோழபுரம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம் 04.01.2013 அன்று அபுதாபி TNTJ மர்கசில் நடைப்பெற்றது. இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

திங்கள், 14 ஜனவரி, 2013

பேச்சாளர் பயிற்சி முகாம்!

சோழபுரம்: அல்லாஹ்வின் அருளாளல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக நேற்று (13.01.2013) ”பேச்சாளருகளுக்கான  பயிற்சி முகாம்” ஐந்தாவது வாரமாக  காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை மாநில பேச்சாளர் சகோ.சுல்தான் இபுராஹிம் அவர்களால் நடத்தப்பட்டது.

குர்ஆன்,ஹதீஸ் சுவர் விளம்பரம் தாவா!

சோழபுரம்: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக மக்களுக்கு சத்திய இஸ்லாத்தை தூய வடிவில் கொண்டு இலகுவாக செல்லும் முகமாக சோழபுரத்தில் 25-க்கும் மேற்ப்பட்ட சுவர்களில் இனைவைப்பிற்கு எதிராகவும், சமூக தீமைகளுக்கு எதிராகவும் குர்ஆன்,ஹதீஸ் வாசகங்கள் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.

இது பிறமத சகோதரர்கள் உள்பட மக்கள் மத்தியில் வரேவேற்ப்பை பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சோழபுரம் ராமனஜபுரம்தெருவில் பெண்கள் தர்பியா

சோழபுரம் ராமனஜபுரம்தெருவில் பெண்கள் தர்பியா 06/01/13 அன்று  நடைப்பெற்றது.
உரை : S.சர்மிலா பானு ஆலிமா.
தலைப்பு: விசாரணை வளையத்தில் V.I.Pகள்.
 
 உரை : சர்மிலா பானு ஆலிமா.
தலைப்பு: ஒழுக்கம்.
உரை : சப்ரின்.
தலைப்பு: நரகில் செல்லும் மூவர்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சோழபுரம் TNTJ - UAE கிளையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் UAE கிளையில் ஆலோசனை கூட்டம் Abu Dhabi TNTJ  தவ்ஹீத் மர்க்கஸில் 04/01/2013 அன்று நடைப்பெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 1 டிசம்பர், 2012

சோழபுரம் கிளையில் ப்ளெக்ஸ் போர்டு மூலம் தஃவா.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 26.11.12 திங்கட்கிழமை அன்று கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு உணர்வு வார இதழில் வெளியான் உணர்வலையில் தலித்துகளுக்கு தஃவா செய்யும் விதமான செய்தி வெளியானது இதை 10x8 சைசில் ஊரின் பிரதான சாலையில் வைக்கப்பட்டது.

சோழபுரம் கிளையில் யார் இந்த மாமனிதர் நோட்டிஸ் விநியோகம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27.11.12 செவ்வாய்க்கிழமை அன்று 1000 நோட்டிஸ் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.